எல்ஐசி கல்வி உதவித் தொகை

எல்ஐசி சார்பில் 10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

எல்ஐசி கோட்டத்தின் ஒவ்வொரு கோட்டத்திலும் பொருளாதாரத்தில் நலிவுற்ற 10, 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 

இதன்படி ஒவ்வொரு கோட்டத்திலும் 10, 12-ம் வகுப்புகளை சேர்ந்த தலா 10 பேர் என மொத்தம் 20 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இந்த உதவித் தொகையை பெற வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.licindia.in இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *