சுயதொழில் தொடங்க ரூ.15 லட்சம் வரை கடன் உதவி

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.15 லட்சம் வரையிலும் சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும். இதில் 25 சதவீதம் மானியமாகும்.
தகுதியுடைய நபர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கொரோனா காரணமாக நேர்முகத் தேர்வின்றி தகுதியான விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள தொழில் வணிகத் துறை மண்டல இயக்குநரை நேரடியாகவோ 2250621 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *