உள்ளாட்சி தேர்தலை 6 மாதத்தில் நடத்த உத்தரவு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் உட்பட மொத்தம் 27 மாவட்டங்களில் கிராமப்புற ஊரக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை. 

இதுதொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டே அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்தது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 6 மாதங்களில் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகளை முடித்து  உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *