டிச. 27 முதல் லாரிகள் ஸ்டிரைக்

டிச. 27 முதல் லாரிகள் ஸ்டிரைக் நடைபெற உள்ளது.

சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் வில்லை, ஜிபிஆர்எஸ் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“ஜிபிஆர்எஸ் உள்ளிட்ட கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களில் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. வாட் வரியை குறைத்து தமிழகத்தில் டீசல் விலையை குறைக்க வேண்டும். கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு  காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் அபராத நடைமுறையை கைவிட வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 27-ம் தேதி முதல் லாரிகள் ஸ்டிரைக் நடத்தப்படும் என்று மாநில லாரி உரிமையாளர் சம்மேளனண தலைவர் எம்.ஆர். குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *