லாரி வாடகை 30% அதிகரிப்பு

டீசல் விலை உயர்வால் லாரி வாடகை 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 14 லட்சம் லாரிகள் பயன்பாட்டில் உள்ளன. டீசல் விலை உயர்வு காரணமாக இரு வாரங்களுக்கு முன்பு லாரி வாடகை கட்டணம் 25 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது.

தற்போது வரை பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதன்காரணமாக லாரி வாடகை மேலும் 30 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. லாரி வாடகை அதிகரித்திருப்பதால் அத்தியாவசிய பொருட்களான அரிசி, காய்கறி, மருந்து ஆகியவற்றின் விலையும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமையல் காஸ் விலையால் நடுத்தர, ஏழை குடும்பங்களின் வீட்டு பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளது.  அத்தியாவசிய  பொருட்கள் விலை உயர்ந்தால் நடுத்தர, ஏழை மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *