மாடர்ன் உடையில் லொஸ்லியா – தீயாய் பரவும் புகைப்படம்

கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரை விஜய் டி.வி.யில் ஒளிரபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈழத்து பெண் லொஸ்லியா, உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடையே பெரும் புகழ் பெற்றார். பிக்பாஸில் பட்டாம்பூச்சியாக பறந்த அவரது நடை, உடை, பாவனைக்காக ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் கூடியது.


பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அவர் எதிர்பார்த்தபடியே திரைப்பட வாய்ப்பு கைகூடியது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகர் அர்ஜுன் ஆகியோருடன் அவர் இணைந்து நடித்துள்ள ‘பிரண்ட்ஷிப்’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஹர்பஜன் சிங்கும் லொஸ்லியாவும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.


ஆரம்பத்தில் இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லொஸ்லியா இப்போது கதாநாயகியாக வளர்ந்துள்ளார். அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலாச்சார, மாடர்ன் உடைகளில் புதிய புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.


கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக பாவாடை, தாவணியில் இன்ஸ்டாகிராமில் ஜொலித்த லொஸ்லியா கடந்த வெள்ளிக்கிழமை மாடர்ன் உடையில் மிரட்டினார். புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அடுத்து அவர் என்ன புகைப்படத்தை வெளியிடுவார் என்று லொஸ்லியா ஆர்மி, இன்ஸ்டாகிராமை மொய்த்துக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *