விஜய் டிவியின் பிக்பாக்ஸ் 3 நிகழ்ச்சியில் ஈழத்து பெண் லாஸ்லிஸா பங்கேற்று உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே பிரபலம் அடைந்தார்.
கிரிக்கெட் வீரர் ஹர்ஜபன் சிங், லாஸ்லியா, ஆக்ஸன் கிங் அர்ஜுன் இணைந்து பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நண்பர்கள் தினத்தையொட்டி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது. அர்ஜுனும் ஹர்பஜனும் மிரட்ட, லாஸ்வியா அழுது அனுதாபத்தை அள்ளுகிறார்.
இந்த படத்தின் மூலம் ஹர்பஜன் சிங், லாஸ்வியா முதல்முறையாக திரையுலகில் கால் பதிக்கின்றனர். அவர்கள் வெற்றியடைய பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.