சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு

இரண்டு மாதங்களுக்குப் பிறகு சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

சமையல் காஸ் விலை மாதந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.  கடந்த 2 மாதங்களாக விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் டிசம்பர் மாதத்துக்கான சமையல் காஸ் விலை ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

இதன்படி சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.610-ல் இருந்து ரூ.660 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.56.50 ஆக உயர்ந்து ரூ.1,410.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *