மாநில அரசு, தனியார் ஊழியருக்கும் எல்டிசி வருமான வரிச் சலுகை

மாநில அரசு, தனியார் ஊழியருக்கும் எல்டிசி வருமான வரிச் சலுகை வழங்கப்படும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை, தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவதற்கான விடுமுறை கால பயணப் படிக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.36,000 வரை சலுகை அளிக்கப்படும் என்று மத்திய வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.  

கொரோனாவால் சுற்றுலா தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையில் இந்த வருமான வரிச் சலுகை அளிக்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *