எம்.இ., எம்.டெக். படிப்புகளுக்கு இணையவழியில் கலந்தாய்வு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வைரஸ் தொற்று பரவல் சற்று அதிகமாக உள்ளது.
கடந்த ஆண்டு வரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு நேரடி கலந்தாய்வு நடைபெற்று வந்தது.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலால் எம்.இ., எம்.டெக். படிப்புகளுக்கு இணைய வழியில் கலந்தாய்வு நடத்த தமிழக அரசிடம் அண்ணா பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்தது.
இதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு எம்.இ., எம்.டெக். படிப்புகளுக்கு இணையவழியில் கலந்தாய்வு நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *