ஒரு வகுப்பை வேறு பள்ளியில் படித்தால்கூட 7.5 % உள் இடஒதுக்கீட்டை கோர முடியாது என்று சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இளநிலை மருத்துப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெற ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும். அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படித்தால்கூட இடஒதுக்கீட்டை பெற முடியாது.
இந்நிலையில் ஒரு வகுப்பை வேறு பள்ளியில் படித்த மாணவர் ஒருவர், 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த ஐகோர்ட் கிளை, “ஒரு வகுப்பை வேறு பள்ளியில் படித்திருந்தாலும்கூட இடஒதுக்கீட்டை கோர முடியாது” என்று உத்தரவிட்டது.