மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் சாலை ரூ.35 கோடி செலவில் புதுப்பிப்பு

மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் சாலை ரூ.35 கோடி செலவில் புதுப்பிப்பு செய்யப்படுகிறது.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதியாக மதுரவாயல்- ஸ்ரீபெரும்புதூர் இடையிலான 27 கி.மீ. சாலை உள்ளது.

மதுரவாயல், வானகரம், திருவேற்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 

இதையடுத்து வானகரம், திருவேற்காடு, பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் 10 கோடி ரூபாய் செலவில் கான்கிரீட் போடப்பட்டு சாலை சந்திப்புகள் மேம்படுத்தப்பட்டன.

தற்போது சாலை புதுப்பிப்பு பணிகளுக்கு 35 கோடி ரூபாயை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. 

இந்தப் பணிகளை 2 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *