மருத்துவமனையில் மத்திய பிரதேச முதல்வர்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் 26 ஆயிரத்து 926 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநில தலைநகர் போபால் மற்றும் இந்தூரில் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவி வருகிறது.
அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு கடந்த மார்ச் மாதம் பாஜக அரசு பதவியேற்றது.

புதிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிரமாகப் பணியாற்றி வந்தார். மூத்த அதிகாரிகளுடன் அடிக்கடி கலந்துரையாடினார். அவ்வப்போது அமைச்சரவை கூட்டங்களை நடத்தினார்.


இந்த சூழ்நிலையில் அவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட சளி மாதிரி பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை அவர் ட்விட்டர் வாயிலாக நேற்று அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் உரை விவரங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் முத்லவர் சிவராஜ் சிங் சவுகான்.
பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் உரை விவரங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் முத்லவர் சிவராஜ் சிங் சவுகான்.


வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவேன், வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வேன் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார். ஆனால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமானதால் போபாலில் உள்ள சரேயு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் இருந்தபடியே பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் உரையின் முழு விவரங்களை தொலைக்காட்சியில் அவர் பார்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *