மத்திய பிரதேச முதல்வருக்கு கொரோனா

மத்திய பிரதேசம் மாநிலத்தில் 26 ஆயிரத்து 210 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநில தலைநகர் போபால் மற்றும் இந்தூரில் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவி வருகிறது.
கடந்த மார்ச் மாதம் மாநிலத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றது.

புதிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிரமாகப் பணியாற்றி வந்தார். மூத்த அதிகாரிகளுடன் அடிக்கடி கலந்துரையாடினார். அவ்வப்போது அமைச்சரவை கூட்டங்களை நடத்தினார்.

கடந்த 22-ம் தேதி முதல்வர் சிவராஜ் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்.


இந்த சூழ்நிலையில் அவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட சளி மாதிரி பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை அவர் ட்விட்டர் வாயிலாக இன்று அறிவித்தார்.


என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த 22-ம் தேதி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.


அனைவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு தனித்தனியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் வைரஸ் பரவல் தடுப்பு பணியில் தொய்வு ஏற்படக்கூடும் என்று அதிகார வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *