சர, சரவென்று மின் கம்பத்தில் ஏறும் பெண்!

மகாராஷ்டிராவில் பெண் ஒருவர் மின் கம்பத்தில் சர, சரவென்று ஏறி மின் கோளாறை சரி செய்து வருகிறார்.

கடினமான வேலைகளை பெண்களால் செய்ய முடியாது என்று ஆண்களில் ஒரு தரப்பினர் இன்றளவும் கூறி வருகின்றனர். ஆனால் அவற்றையெல்லாம் பெண்கள் தவிடிபொடியாக்கி வருகின்றனர்.

அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக சாதிக்க முடியும் என்பதை பெண்கள் தங்கள் திறமையால் நிரூபித்து வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் மகாராஷ்டிராவின் பீட் பகுதியை சேர்ந்த உஷா. இவர் மகாராஷ்டிர மின் வாரியத்தில் எலெக்ட்ரீசனாக பணியாற்றி வருகிறார்.


மின் விநியோகத்தில் ஏதாவது கோளாறு என்றால் பீட் பகுதி மக்கள், செல்போனில் உஷாவை அழைக்கின்றனர்.

மக்களின் குரல் கேட்டு ஓடி வரும் அவர், சர, சரவென்று மின் கம்பத்தில் ஏறி சில நிமிடங்களில் கோளாறை சரி செய்கிறார்.

ஒரு நாளைக்கு பல மின் கம்பங்களில் அநாசியமாக ஏறி இறங்குகிறார்.

பொதுவாக மின் கம்பத்தில் ஏறும் எலெக்ட்ரீசன்கள், உயிர் பாதுகாப்புக்காக சிறிய கம்பு, கயிறை கையில் வைத்திருப்பார்கள்.

ஆனால் எவ்வித உபகரணமும் இன்றி வெறும் கை, கால்களால் உஷா மின் கம்பத்தில் சர்ரென்று ஏறுகிறார்.

சறுக்கென்று இறங்குகிறார். அவர் மின் கம்பத்தில் ஏறி இறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *