பாலிவுட், டோலிவுட், கோலிவுட்டில் நடிகை மந்திரா பேடியை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. கிரிக்கெட் தொகுப்பாளர், மாடலிங், சின்னத்திரை, வெள்ளித்திரை என எந்த துறையையும் அவர் விட்டு வைக்கவில்லை.
கொல்கத்தாவில் பிறந்து மும்பையில் குடியேறிய அவர் இதுவரை பல்வேறு மொழிகளின் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மன்மதன், சாஹோ திரைப்படங்களில் மந்திரா பேடி தலை, உடலை காட்டியுள்ளார். தற்போது ஜி.வி. பிரகாஷின் அடங்காதே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பாக 365 நாள் உடற்பயிற்சி சவாலை மந்திரா பேடி தொடங்கினார். ஜிம்மிலும் வீட்டிலும் வியர்வை சொட்ட சொட்ட அவர் உடற்பயிற்சி செய்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வந்தார். 48 வயதில் என்னாலேயே இந்த உடற்பயிற்சிகளை செய்யும்போது உங்களால் ஏன் முடியாது என்று குடும்ப தலைவிகளை உற்சாகப்படுத்தினார்.
அவர் தனது 365-வது நாள் சவாலை ஆகஸ்ட் 12-ம் தேதி நிறைவு செய்தார். இதை இன்ஸ்டாகிராமில் அவர் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். உடற்பயிற்சியின் மூலம் அவரது உடல் வாளிப்பாகி இருப்பதை வீடியோ, புகைப்படங்கள் உறுதி செய்கின்றன.