மெரினா கடற்கரைக்கு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு செல்ல தொடர்ந்து தடை நீடிக்கிறது. அந்த வகையில் பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் செல்வதற்கு அனுமதி இல்லை.
கடந்த 2 வாரங்களாக சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. போலீஸார் அறிவுறுத்தியும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதைத் தொடர்ந்து சென்னை போலீஸார் மெரினா கடற்கரையில் புதிதாக அறிவிப்பு பலகையை நிறுவியுள்ளனர். அதில் மெரினா கடற்கரையில் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளின் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் குவிந்து வருவதாகக் கூறப்படுகிறது. கூட்டத்தை தவிர்க்க போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.