3 வாரங்கள் முகக்கவசம் அணிந்தால் கொரோனா ஒழியும்

தொடர்ந்து 3 வாரங்கள் முகக்கவசம் அணிந்தால் கொரோனா ஒழியும் என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக மக்கள் அனைவரும் 3 வாரங்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்தால் தமிழகத்தில் கொரோனா தொற்று ஒழியும். 

இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வாகனங்களில் எல்இடி திரை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *