சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ஒரே நாளில் ரூ.2.55 லட்சம் அபராதம் வசூல்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பூங்காக்கள், வங்கிகள், வணிக நிறுவனங்களில் கடந்த 16-ம் தேதி மாநகராட்சியின் மண்டல அமலாக்க குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது முகக்கவசம் அணியாத 1,278 பேரிடம் இருந்து தலா ரூ.200 அபராதம் வசூல் செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் ரூ.2.55 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
அன்றைய தினம் திருமண மண்டபங்களில் ஆய்வு செய்யப்பட்டு 70 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டது. அந்த பகுதிகளில் ரூ.2.61 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *