மூன்றாண்டு எம்சிஏ படிப்பு, 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பதில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. இந்தியாவில் வரும் நவம்பரில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே இந்த ஆண்டு முழுவதும் கல்வி நிறுவனங்களை திறப்பது கடினம் என்று கூறப்படுகிறது.
இதற்கேற்ப பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் மாற்றம் செய்து வருகின்றன. பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டு வருகிறது.
இதன்படி மூன்றாண்டு எம்சிஏ படி்பபு இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில் நடந்த பல்கலைக்கழக மானியக் குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கேற்ப புதிய பாடத்திட்டம் 2020-21-ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவித்துள்ளது.
பிஎஸ்சி, பிசிஏ, பிகாம் உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக எம்சிஏ படிப்பில் சேரலாம்.