அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை ஆணை

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை ஆணை வழங்கினார் தமிழக முதல்வர் பழனிசாமி.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை தமிழக அரசு அண்மையில் நிறைவேற்றியது.  இந்நிலையில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். 

“இந்த நாள் எனக்கு மகிழ்ச்சியான நாள். அரசு பள்ளி மாணவர்களுக்கு நன்னாள். நீட் தேர்வு ரத்து கோரி பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். சட்டப் போராட்டமும் நடத்தி வருகிறோம்.

அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு மருத்துவக் கனவை நிறைவேற்றி உள்ளோம். பல தடைகளை தாண்டி இந்த சட்டம் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கி உள்ளது. நான் முதல்வராக பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் 1,990 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன” என்று முதல்வர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *