தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படித்து அதன்பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த உள்ஒதுக்கீடு தொடர்பாக விரைவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.