மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்.

நடப்பு கல்வி ஆண்டில் (2020-2021) அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பிஎஸ்சி, நர்சிங், பி.பார்ம், செவித் திறந் பேச்சு, மொழி நோய்க் குறியியல், ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோதரெபி,

கார்டியோ பல்மனரி பெர்பியூஷன் டெக்னாலஜி, மெடிக்கல் லேப் டெக்னாலஜி, டயோலிசிஸ் டெக்னாலஜி, ஆபரேஷன் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி,

கார்டியாக் டெக்னாலஜி, கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, பிசிசியன் அசிஸ்டென்ட், ஆக்ஸிடென்ட் எமர்ஜென்ஸி கேர் டெக்னாலஜி, ரெஸ்பிரேட்டரி தெரபி,

ஆக்குபேஷனல் தெரபி, ஆப்டம் ஆகிய மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த படிப்புகளில் சேர விரும்புவோர் www.tnhealth.org என்ற இணையதளத்தில் அக்.15 வரை விண்ணப்பிக்கலாம். பதிவு செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அத்துடன் சான்றிதழ்களின் நகலை இணைத்து செயலாளர்,

தேர்வுக் குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈவேரா பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு அக்.17-ம் தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 98842 24648, 98842 24649 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *