நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தவர்.
கடந்த 1984-ல் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில்தான், ரஜினியுடன் நடிகை மீனா முதல்முறையாக குழந்தை நட்சத்திரமாக நடித்தார் என்று பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
உண்மை அதுவல்ல. கடந்த 1982-ல் வெளியான எங்கேயோ கேட்ட குரல் படத்திலேயே ரஜினியுடன் மீனா நடித்துள்ளார். இதில் ரஜினி, அம்பிகாவின் மகளாக மீனா நடித்துள்ளார்.
மலரும் நினைவுகளில் மூழ்கியுள்ள நடிகை மீனா, ரஜினியுடன் குழந்தை நட்த்திரமாக நடித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் கடந்த புதன்கிழமை பதிவு செய்தார்.
அதில், நெஞ்சங்கள் படத்தில் நான் நடித்திருந்தாலும் அந்த படம் முதலில் வெளியாகவில்லை. எங்கேயோ கேட்ட குரல் படம்தான் முதலில் வெளியானது என்று மீனா கூறியுள்ளார்.