ஜிஎஸ்டி பதிவு எண் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதிதாக ஜிஎஸ்டி பதிவு எண் பெற விண்ணப்பிக்கும் வணிகர்களுக்கு 2 நாட்களில் இருந்து 6 நாட்களுக்குள் பதிவு எண் வழங்கப்படும் என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் உறுதி கூறுகின்றனர்.
ஆனால் 2 வாரங்களான பிறகும் பதிவு எண் கிடைக்கவில்லை. மிக நீண்ட காலதாமதம் ஏற்படுகிறது என்று வணிகர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஜிஎஸ்டி பதிவு எண் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் என்று வணிகர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.