மெரினா தடை நீங்குமா?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் மெரினாவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ரமேஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

“மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல எப்போது அனுமதிக்கப்படும்” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக அரசு ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வரும் 30-ம் தேதிக்குள் அரசு முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றமே முடிவு எடுக்கும்” என்று நீதிபதிகள் கெடு விதித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *