சென்னையில் மெட்ரோ ரயில் சுற்றுவட்ட பாதை

சென்னையில் மெட்ரோ ரயில் சுற்றுவட்ட பாதை அமைக்கப்பட உள்ளது.

விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையிலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டமாக மாதவரம்-சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரைவிளக்கம்- பூந்தமல்லி ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. வரும் 2026-ம் ஆண்டில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முடிந்த பிறகு இரண்டரை மணி நேரத்தில் ஒற்றை ரயில் பயணத்தில் சென்னையை சுற்றி வரும் விதமாக சுற்றுவட்டப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அதாவது மாதவரத்தில் இருந்து சென்னையின் கிழக்கே அடையாறு, மேற்கே கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரை 81 கி.மீ. தொலைவு வரை சுற்றுவட்டப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *