விமான நிலையம்- வண்டலூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக நிலம் கணக்கிடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த 2018-ம் ஆண்டில் அறிவித்தார். இந்த திட்டத்துக்கான நிலம் கணக்கிடும் பணி தீவிரமடைந்துள்ளது.
இதன்படி ஜிஎஸ்டி சாலையையொட்டி மெட்ரோ ரயில் விரிவாக்கம் குறித்து முதல்கட்ட ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. முதல்கட்டத்தில் 16 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
ஒரு நிலையத்துக்கும் மற்றொரு ரயில் நிலையத்துக்கும் இடையே 1.2 கி.மீ. தொலைவு இருக்கும்.
நிலம் கணக்கீடு பணியைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.