சென்னை மெட்ரோ ரயிலில் முதல் வகுப்பு பெட்டிகள், மகளிர் பெட்டிகளாக மாற்றப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில்களில் உள்ள அனைத்து முதல் வகுப்பு பெட்டிகளும் மகளிர் மட்டும் பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன.
இந்த நடைமுறை நவ. 23-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தற்போதுள்ள சாதாரண கட்டணத்திலேயே முதல் வகுப்பு பெட்டியில் பெண்கள் பயணம் செய்யலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.