வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ஜனவரியில் மெட்ரோ ரயில் சேவை

வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ஜனவரியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை விமான நிலையம்- வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல்-பரங்கிமலை வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையம்- வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் விம்கோ நகர் வரை விரிவாக்க திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விரிவாக்க வழித்தடத்தில் சர். தியாகராயர் கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கவுரி ஆசிரமம், திருவொற்றியூர், விம்கோநகர் ஆகிய 6 ரயில் நிலையங்கல் அமைக்கப்பட்டுள்ளன. 

இதுவரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வண்ணாரப்பேட்டை, விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் ஓடும் என்று மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *