வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் மெட்ரோ ரயில் அடுத்த வாரம் சோதனை ஓட்டம்

வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்த வாரம் நடைபெறுகிறது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழித்தடத்தில் சர்.தியாகராயர் கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி தாங்கல், கவுரி ஆசிரிமம், திருவொற்றியூர் விம்கோ நகர் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய வழித்தடத்தில் அடுத்த வாரம் சோதனை நடத்தப்பட உள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *