இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கம்

கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து சென்னையில் மெட்ரோ ரயில்களின் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஜூலை 12-ம் தேதி முதல் வார நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
நெரிசல் மிகுந்த காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் ஓடும்.
ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். முகக்கவசம் அணியாத, கொரோனா விதிகளை பின்பற்றாத பயணிகளிடம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *