சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி

தமிழக சட்டப்பேரவையில் கடந்த புதன்கிழமை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசிய போது, சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது” என்று தெரிவித்தார். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.  
“சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் எவ்வித தாமதமும் இன்றி செயல்பட தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதால் மத்திய வழங்க வழங்க வேண்டிய நிதி, தமிழக அரசு மூலம் விரைவில் எங்களுக்கு கிடைக்கும். 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *