சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 259 சத்துணவு அமைப்பாளர், 354 சமையல் உதவியாளர் காலி பணியிடங்கள் உள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த அலுவலங்களில் விண்ணப்பங்களை பெற்று வரும் அக். 3-ம் தேதிக்குள் ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என்று திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அறிவித்துள்ளன.