சத்துணவு பணியாளர் தேர்வு ரத்து

சத்துணவு பணியாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நேர்காணல் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. 

இந்த பணியிடங்களுக்கு 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 

21 வயதில் இருந்து 40 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் முதல் அதிகப்பட்சமாக ரூ.24 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இதன்காரணமாக 5-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டதாரிகள், இன்ஜினியர்கள் வரை லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்தனர். 

இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிக்கான தேர்வு நடைமுறைகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *