ராணுவ பள்ளிகளில் சேரலாம் வாங்க…

நாட்டுக்காக உயர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் 10 வயது முதல் 16 வயது வரையிலான குழந்தைகளை இமாச்சல பிரதேசத்தின் சைல், ராஜஸ்தானின் டோல்பூர், அஜ்மீர், கர்நாடக தலைநகர் பெங்களூரு, பெலகாவி ஆகிய பகுதிகளில் செயல்படும் ராஷ்டிரிய ராணுவ பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கலாம். 6, 9, 11-ம் வகுப்பு சேர்க்கைக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் வரை நடைபெற உள்ளது.
முழுமையான விவரங்களுக்கு www.rashtriyamilitaryschools.in இணையதளத்தை பார்வையிடலாம். அந்தந்த மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ, தொலைபேசியிலோ அழைத்து கட்டணம், இடஒதுக்கீடு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *