அனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின்

மதுரவாயல் தொகுதியில் அனைவருக்கும் தாராளமாக குடிநீர் கிடைக்க அமைச்சர் பென்ஜமின் நடவடிக்கை எடுத்திருக்கிறார். தொகுதி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளையும் அவர் மேற்கொண்டிருக்கிறார்.

சென்னையின் கேட் என்று  அழைக்கப்படும் மதுரவாயல் தொகுதியிலிருக்கும் பகுதிகள்  மாநகராட்சியோடு இணைக்கப்பட்டதால் மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் கிடைத்திருக்கின்றன.

ஜெயலலிதாவுடன் அமைச்சர் பென்ஜமின்
ஜெயலலிதாவுடன் அமைச்சர் பென்ஜமின்

அமைச்சர் பென்ஜமின்

இந்தத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட பென்ஜமினின் கட்சி பணிகளைப் பார்த்து அமைச்சர் பதவி கொடுத்தார் ஜெயலலிதா.

மதுரவாயல் தொகுதியின் மக்கள் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் அமைச்சர் பென்ஜமின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தொகுதியில் நிலவி வந்த குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண போரூர் நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் 17.50 கோடி ரூபாயில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

குடிநீர்

இந்தப் பணிகள் 55 சதவிகிதம் நிறைவடைந்திருக்கிறது. இந்தத் திட்டம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் போது மதுரவாயல் தொகுதியில் குடிநீர் பிரச்னையே இருக்காது.

நேஷனல் ஹெல்த் மிஷன் என்ற திட்டத்தின் மூலம் போரூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கான பணிகள் 2016-ல் தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் நிறைவடைந்து 2019-ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

போரூர் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பெயரில் மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. அதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் முழுமையாக குறைந்துள்ளது.

அமைச்சர் பென்ஜமின் ஆய்வு
அமைச்சர் ஆய்வு

குளங்கள்

 நொளம்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த அரசு அலுவலக கட்டட வளாகங்கள் அமைக்க அமைச்சர் பென்ஜமின் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதனால் மதுரவாயல் தொகுதி மக்கள், அரசு சேவைகளை உள்ளூரிலேயே பெற முடிகிறது.

தொகுதியிலிருக்கும் குளங்கள் தூர்வாரப்பட்டதால் மழைநீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ஏரி பகுதிகளில் அமைந்திருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். தொகுதியிலிருக்கும் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

 அயப்பாக்கத்தில் ரூ.12.22 கோடியில் அம்மா திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளதால் தொகுதி மக்களுக்கு பெரிதும் பயன்டைந்திருக்கின்றனர்.

ஆய்வில் அமைச்சர் பென்ஜமின்
பணிகளைப் பார்வையிடும் அமைச்சர் பென்ஜமின்

அரசு இன்ஜினீயரிங் கல்லூரி

அடுத்தப்படியாக தொகுதியில் ஏராளமான தனியார் இன்ஜினீயரிங் கல்லூரிகள் இருந்தாலும் அரசு சார்பில் இன்ஜினீயரிங் கல்லூரி தொடங்க அமைச்சர் பென்ஜமின் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

அதுதொடர்பாக ஜெயலலிதாவிடம் கோரிக்கையை வைத்தப்போது உடனடியாக அதற்கு ஓகே என்று கூறியிருக்கிறார் ஜெயலலிதா. இதையடுத்து அடையாளம்பட்டில் புதியதாக அரசு இன்ஜினீயரிங் கல்லூரி ஆரம்பிக்க அனைத்து நடவடிக்கைளிலும் அமைச்சர் பென்ஜமின் மேற்கொண்டு வருகிறார்.

தொகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சாம்பலாக்கும் திட்ட பணிகள் நடந்துவருகிறது. அயப்பாக்கத்திலிருக்கும் கட்டப்பட்டிருக்கும் கட்டடத்தில் காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாதாள சாக்கடை திட்டம்

அங்கு புதிய காவல் நிலையம் அல்லது புறகாவல் நிலையம் அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தொகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகள் நிறைவடையாத பகுதிகளில் திட்டத்தைச் செயல்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அங்கும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்ட பிறகு தொகுதி முழுவதும் முழுமையாக பாதாள சாக்கடை திட்டம் அமலப்படுத்தப்பட்டு விடும்

கொரோனா

ஆய்வில் அமைச்சர் பென்ஜமின்
தூர்வாரும் பணியைப் பார்வையிடும் அமைச்சர் பென்ஜமின்

கடந்த 5 ஆண்டுகளில் எம்.எல்.ஏ நிதி முழுமையாக தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் அமைச்சர் பென்ஜமின் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தொகுதி முழுவதும் 500 டன் அரிசி, மளிகை பொருள்கள் மக்களுக்கு வழங்கியிருக்கின்றனர்.

முஸ்லீம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதைக்கும் இடத்துக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மதுரவாயல் ஏரி பகுதி, குடிசை மாற்றுவாரிய வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு  பத்திரங்களை வழங்கவும் போரூர் ஏரி பகுதி மக்களுக்கும் இட ஒதுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதியில் 95 சதவிகிதத்துக்கு மேல் நிறைவேற்றியிருக்கிறார் அமைச்சர் பென்ஜமின். கட்சி வளர்ச்சி பணி, தொகுதி வளர்ச்சி பணி ஆகியவற்றை இருகண்களைப் போல பாவித்து அமைச்சர் பென்ஜமின் செய்துவருகிறார்.

சாலைப் பணிகளை ஆய்வு செய்யும் அமைச்சர்   பென்ஜமின்
சாலைப் பணிகளை ஆய்வு செய்யும் அமைச்சர் பென்ஜமின்

மழை நீர்

இந்தத் தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் குடியிருந்து வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு மதுரவாயல் தொகுதியில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி மக்களை படாதபாடு படுத்தியது.

அப்போது நேரில் சென்று மக்களுக்குத் தேவையான உதவிகளை அமைச்சர் பென்ஜமின் செய்தார்.

அதைத் தொடர்ந்து தொகுதியிலிருக்கும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு மழை நீர் தேங்காமலிருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் பென்ஜமின் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தொகுதிக்கு அடையாறு ஆறு செல்வதால் அங்கு மழைநீர் கால்வாய் மூலம் தண்ணீரை கொண்டு சென்றுவிட்டால் தண்ணீர் தேங்க வாய்ப்பில்லை என ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது.

உடனடியாக அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. அதனால் 2015-ம் ஆண்டுக்குப்பிறகு மதுரவாயல் தொகுதியில் மழை நீர் தேங்குவதில்லை.

அமைச்சர் பென்ஜமின்
அமைச்சர் பென்ஜமின்

தேர்தல்

மாவட்டச் செயலாளர், அமைச்சராக இருக்கும் பென்ஜமீன் மீண்டும் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட இருக்கிறார். இந்தத் தொகுதியில் மீண்டும் பென்ஜமின் வெற்றி பெறுவதற்கான வேலைகளை கட்சியினர் தேர்தலுக்கு முன்பே ஆரம்பித்து விட்டனர்.

தொகுதி வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் சாதனைகளை மக்களிடையே கொண்டு சென்று அதை ஓட்டுக்களாக கட்சியினர் மாற்றி வருகின்றனர்.

தற்போதைய சூழலில் மதுரவாயல் தொகுதி அ.தி.மு.கவுக்கு சாதகமாகவே இருக்கிறது. இந்தத் தொகுதியில் அமைச்சர் பென்ஜமினுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளதாக உளவுத்துறையும் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது.

முதல்வர், துணை முதல்வர் பாராட்டு

அ.தி.மு.க.-வின் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண்டபத்தில் ஜெயலலிதா உயிரோடு இருந்தக் காலகட்டத்திலிருந்தே நடத்தப்பட்டு வருகிறது. பொதுக்குழுவுக்கான பொறுப்பை அமைச்சர் பென்ஜமின் முன்னின்றி சிறப்பாக செய்து ஜெயலலிதாவிடமே நல்ல பெயரை வாங்கினார்.

அதன்பிறகுதான் அவருக்கு கட்சியில் அடுத்தடுத்த பதவிகள் வழங்கப்பட்டன. ஜெயலலிதா இல்லாதபோதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சர் பென்ஜமினிடம் இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த பொதுக்குழுவுக்கான பொறுப்பை ஒப்படைத்தனர்.

அதையும் சிறப்பாக நடத்திய அமைச்சர் பென்ஜமினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *