வடமாநிலங்களில் உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 89 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 677 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாள்தோறும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்படுககிறது. அந்த மாநிலத்தில் நேற்று 3 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்தனர்.

இந்த சூழ்நிலையில் உத்தர பிரதேச அமைச்சர் கமல ராணி (வயது 62) கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்பு லக்னோவில் உல்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவரது மறைவுக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை பணிகளை மேற்பார்வையிட முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தி செல்ல திட்டமிட்டிருந்தார். அமைச்சரின் உயிரிழப்பால் முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.