தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் திமுக எல்எல்ஏ ஜெ.அன்பழகனை தவிர மற்ற அனைவரும் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்த வரிசையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது.

அவரது மனைவி, 10 வயது மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 3பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3 பேரின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கரூர் மவட்ட திமுக பொறுப்பாளரும் அரவக்குறித்தி தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.