ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயல் பகுதியில் 114 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று பால் வளத் துறை அமைச்சர் நாசர், வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
மேலும் ரூ.40 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடையை அமைச்சர் பார்வையிட்டார். நரிக்குறவர் காலனியில் ரூ.8.5 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, ரூ.20 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகளையும் அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.
ஆவடி மாநகராட்சியின் மிட்னமல்லி, முத்தாபுதுப்பேட்டை, விளிஞ்சியம்பாக்கம் பகுதிகளில் 20,000 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கோயில்பதாகை, திருமுல்லைவாயல், தண்டுரை, சேக்காடு, பாலேரிப்பட்டு, பருத்திப்பட்டில் 35,162 பேருக்கு வருங்காலங்களில் பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்தார்.