தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்கள் மட்டுமன்றி அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவது அதிகரித்து கொண்டே செல்கிறது.
அண்மையில் உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் – பழனி, பரமக்குடி- சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை – குமரகுரு, கோவை தெற்கு – அம்மன் அர்ஜுணன் உட்பட அதிமுக 8 எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திமுக எம்எல்ஏ அன்பழகன் அண்மையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அந்த கட்சியை சேர்ந்த ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யாறு எம்எல்ஏ ஆர்.டி.அரசு, செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் ஆகியோரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.