அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவப் பிரிவு – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.


“தமிழகத்தில் 18 நகரங்களில் சித்த மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையங்களில் வழங்கப்படும் மூலிகை, பாரம்பரிய உணவு வகைகள் மக்களால் விரும்பப்படுகின்றன.
அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த சித்த மருத்துவப் பிரிவு விரிவுபடுத்தப்படும். சித்த மருத்துவத்தில் இதுவரை 75 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.


சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் போன்று தமிழகம் முழுவதும் உயர் சிகிச்சை மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *