ஓரமாக நின்னாலும் உசுருக்கு உத்தரவாதமில்லை பதற வைக்கும் விபத்து வீடியோ

கேரளாவின் கோழிக்கோடு- பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் கரின்கள்ளதாணி பகுதியில் ஒரு இளைஞர் சாலையோரம் பைக்கை நிறுத்திவிட்டு, பைக்கின் மீது அமர்ந்திருந்தார்.
அப்போது எதிர்திசையில் மஹிந்திரா நிறுவனத்தின் பலேரா கார் வேகமாக வந்தது. அந்த காருக்கு எதிர் திசையில் வந்த ஜேசிபி இயந்திரம் சாலையின் குறுக்காக கடக்க முயன்றது.


ஜேசிபி மீது பயங்கரமாக மோதிய பலேரா கார், மோதிய வேகத்தில் பக்கவாட்டில் திரும்பி பைக்கில் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது மோதியது. இதில் பைக் தனியாகவும் இளைஞர் தனியாகவும் தூக்கி வீசப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இளைஞருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
நெஞ்சை பதற வைக்கும் இந்த விபரீத விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *