ஆனந்த கண்ணீர் வடித்த முதல்வரின் மனைவி துர்கா

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்று கொண்டார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவி காப்பு பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது அவரது மனைவி துர்கா உணர்ச்சிப் பெருக்கில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.  இந்த காட்சி அனைத்து தமிழக தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. துர்காவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *