சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்கள்

சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.324 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி கடந்த புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்.

மேலும் ரூ.294.15 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார். அப்போது வில்லிவாக்கம் சிட்கோ நகர் 4-வது பிரதான சாலை குடியிருப்பு பகுதியில் ரூ.1.08 கோடி மதிப்பிலான பூங்காவை முதல்வர் பழனிசாமி காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.27 லட்சம் செலவில் 3 நடமாடும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நடமாடும் உணவகங்களை முதல்வர் பழனிசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தார். மேலும் சென்னை மாநகராட்சிக்கு ரூ.4 கோடியே 34 லட்சம் மதிப்பிலான குப்பைகளை உறிஞ்சி அகற்றும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட 15 சிறிய வாகனங்களையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *