விரைவில் 3,501 நகரும் ரேஷன் கடைகள்

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு, துறையின் மூத்த அதிகாரிகளுடன் சென்னையில் கடந்த திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். இதன்பின் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று வீடுகளுக்கு அருகிலேயே ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு வருகிறது.


இதற்காக தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் ரேஷன் கடைகள் ரூ.9.66 கோடி செலவில் தொடங்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *