நகரும் ரேஷன் கடைகள்…

நகரும் ரேஷன் கடைகள் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

கடந்த 2014-ம் ஆண்டில் பிப்ரவரி 24-ம் தேதி தமிழகத்தில் நகரும் ரேஷன் கடை திட்டம் தொடங்கப்பட்டது.

இதன்படி மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக 48 நகரும் ரேஷன் கடை செயல்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்று தமிழகம் முழுவதும் 9.66 கோடி ரூபாய் மதிப்பில் 3,501 நகரும் ரேஷன் கடை தொடங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த மார்ச் 20-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதன்படி 3,501 நகரும் ரேஷன் கடை திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சத்து 37 ஆயிரத்து 315 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.

இந்த நகரும் ரேஷன் கடைகள் மாதம் ஒருமுறை அரசால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லும்.

அந்தப்பகுதி ரேஷன் கடைக்காரர் நகரும் ரேஷன் கடை மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *