அழகான ஐஏஎஸ் அதிகாரி.. மாஸ் காட்டிய மாடல் அழகி…

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வு, பிரதான எழுத்துத்தேர்வு, நேர்காணல் என்று 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 2019 ஜூனில் ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வும் அதன்பின் செப்டம்பரில் பிரதான தேர்வும் நடத்தப்பட்டது.


கடந்த பிப்ரவரியில் நேர்காணல் நடைபெற்றது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நேர்காணல் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த ஜூலையில் மீண்டும் நேர்காணல் தொடங்கியது.
சில நாட்களுக்கு முன்பு இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன. ஒட்டுமொத்தமாக 829 பேர் ஐஏஎஸ் உள்ளிட்ட அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாடல் அழகி ஐஸ்வர்யா ஷியோரன்
மாடல் அழகி ஐஸ்வர்யா ஷியோரன்


இதில் ஹரியாணாவை சேர்ந்த பிரதீப் சிங் முதலிடத்தைப் பிடித்தார். டெல்லியை சேர்ந்த ஜதீன் கிஷோர் 2-வது இடத்தையும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரதீபா வர்மா 3-வது இடத்தையும் பெற்றனர்.
இந்த முறை ஐஏஎஸ் தேர்வில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 2 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஜெய் நாராயண் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.


இந்த வரிசையில் டெல்லியை சேர்ந்த மாடல் அழகி ஐஸ்வர்யா ஷியோரன் ஐஏஎஸ் தேர்வில் 93-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட அவரது குடும்பம் டெல்லியில் வசித்தது. கல்லூரி காலத்தில் இருந்தே மாடலிங் செய்து வருகிறார்.

மாடல் அழகி ஐஸ்வர்யா ஷியோரன்
மாடல் அழகி ஐஸ்வர்யா ஷியோரன்

கடந்த 2015-ம் ஆண்டில் நடைபெற்ற டெல்லி பிரஷ் பேஸ் (டெல்லியின் புதுமுகம்) போட்டியில் வெற்றி பெற்றார். கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் இறுதி வரை முன்னேறி, வெளியேறினார்.
ஒரு புறம் மாடலிங்கில் பூனை நடந்தாலும் மற்றொரு புறம் ஐன்ஸ்டீனாக அறிவையும் வளர்த்தார் ஐஸ்வர்யா.

சிறு வயது முதலே ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார். மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றபோதும் ஒரு காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாவேன் என்று சூளூரைத்தார்.
இதுகுறித்து ஐஸ்வர்யா கூறும்போது, “ஒரு காலத்தில் மிஸ் இந்தியாவாக ஆசைப்படேட்ஏந்.

தாய், தந்தை, தம்பியுடன் ஐஸ்வர்யா ஷியோரன்
தாய், தந்தை, தம்பியுடன் ஐஸ்வர்யா ஷியோரன்

அதேநேரம் ஐஏஎஸ் தேர்வுக்கும் தயாராகி வந்தேன். நாள்தோறும் 10 மணி நேரம் படி்பபேன். 8 மணி நேரம் தூங்குவேன். 6 மணி நேரம் மாடலிங் உள்ளிட்ட இதர பணிகளில் ஈடுபட்டேன். இன்று ஐஏஎஸ் அதிகாரியாகிவிட்டேன். மாடலிங்கோ, படிப்போ முழு கவனத்துடன் ஈடுபட்டால் வெற்றி பெறலாம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *