சென்னை மாநகராட்சியில் கொளத்தூரில் நவீன காய்கறி விற்பனை அங்காடி தொடங்கப்படும். இங்கு விவசாயிகளின் வேளாண் விளை பொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படும். உழவர் சந்தையின் விலை அடிப்படையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும்.
இதன்மூலம் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் காய்கறிகள் கிடைக்கும். விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைக்கும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.