சீனா மூஞ்சில குத்து.. குத்து.. கும்மாங்குத்து… மொரீஷியஸ் விழாவில் பிரதமர் மோடி ‘அட்டாக்’

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு மொரீஷியஸ். முதலில் டச்சுகாரர்கள், பின்னர் பிரெஞ்சு, கடைசியில் ஆங்கிலேயர் கைக்கு மொரீஷியஸ் கைமாறியது.


இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்தபோது இங்கிருந்து மொரீஷியஸுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த நாட்டின் இப்போதைய மக்கள் தொகை சுமார் 13 லட்சம். இதில் 68 சதவீதம் பேர் இந்திய வம்சாவழியினர். அவர்களில் ஒரு லட்சம் பேர் தமிழர்கள். தமிழ் மக்களுக்காக தைப்பூசத்துக்கு தேசிய விடுமுறை விடப்படுகிறது. தற்போது அந்த நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவழியை சேர்ந்த பிரவிந்த் ஜக்நாத் பதவி வகிக்கிறார்.

மொரீஷியஸில் புதிதாக கட்டப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற கட்டிடம்.
மொரீஷியஸில் புதிதாக கட்டப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற கட்டிடம்.


மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸில் இந்தியாவின் நிதியுதவியுடன் உச்ச நீதிமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. போர்ட் லூயிஸில் நடைபெற்ற விழாவில் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக மொரீஷியஸ் உச்ச நீதிமன்ற கட்டிடத்தை திறந்துவைத்தார். அவர் பேசும்போது, “வளர்ச்சி என்ற பெயரில் சில நாடுகள், பின்தங்கிய நாடுகளுக்கு உதவுகின்றன. பின்னர் அப்படியே காலனி, ஏகாதிபத்திய ஆட்சிக்கு வழிவகுக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை கூட்டணியில் உள்ள நட்பு நாடுகளை மதிக்கிறோம். எங்களுடனான உறவில் எவ்வித நிபந்தனைகளும் கிடையாது” என்று தெரிவித்தார்.

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத்  கடந்த ஆண்டு ஜூலையில் டெல்லி வந்திருந்தபோது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் கடந்த ஆண்டு ஜூலையில் டெல்லி வந்திருந்தபோது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.


துறைமுக மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் சீனா கால் பதித்துள்ளது. அந்த நாடுகளுக்கு சீனா பெரும் தொகையை கடனாக அளித்துள்ளன. தற்போது அந்த நாடுகள் கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் சீனாவிடம் அடிமைப்பட்டு கிடப்பதாகக் கூறப்படுகிறது. சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி அந்த நாட்டின் முகத்தில் கும்மாங்குத்து குத்தியிருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *